மற்றோர் உலகச் சாதனைக்கு குறிவைக்கும் துபாய்

மற்றோர் உலகச் சாதனைக்கு குறிவைக்கும் துபாய்

1 mins read
0a860e1c-7143-42c3-b85a-7fe2a6bef3bf
படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

உலகின் ஆகப் பெரிய, ஆக உயரமான ராட்டினம், அக்டோபர் 21ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.

'அய்ன் துபாய்' எனும் அந்த ராட்டினத்தின் உயரம் 250 மீட்டர். லண்டனில் 135 மீட்டர் உயரமுடைய 'லண்டன் ஐ' ராட்டினம், லாஸ் வேகசில் 167 மீட்டர் உயரமுடைய 'ஹை ரோலர்' ராட்டினம் ஆகியவற்றை துபாயின் ராட்டினம் விஞ்சிவிட்டது.

இந்த ராட்டினம் ஒருமுறை முழுமையாக சுற்றி முடிக்க 38 நிமிடங்கள் ஆகுமாம்.

ராட்டினத்தில் ஒரே நேரத்தில் 480 பேர் வரை இருக்கலாம்.

ராட்டினத்தில் ஏற பெரியவர்களுக்கான கட்டணம் 130 திர்ஹம் (S$48). மூன்று முதல் 12 வயது சிறுவர்களுக்கான கட்டணம் 100 திர்ஹம்.