அமெரிக்கா: திட்டமிட்ட ஐஎஸ் உறுப்பினரை கொன்றுவிட்டோம்

1 mins read
9d85e34f-6a70-406a-b554-00b37705ac49
காபூல் ராணுவ விமான நிலையத்திலிருந்து புறப்படும் அமெரிக்க ஆகாயப் படை விமானம். படம்: ஏஃப்பி -

வாஷிங்­டன்: ஆப்­கா­னிஸ்­தா­னில் இயங்­கும் ஐஎஸ்­ஐ­எ­ஸ் அமைப்பின் ஐஎஸ்-கே பிரிவில் திட்­ட­மி­டும் பணி­யில் உள்ள ஒரு­வ­ரைக் கொன்று­விட்­ட­தாக அமெ­ரிக்க ராணு­வம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று காபூல் விமான நிலை­யத்­தில் நிகழ்த்­தப்­பட்ட தற்­கொ­லைத் தாக்­கு­தலைத் தொடர்ந்து அமெ­ரிக்கா நடத்­திய ஆளில்லா வானூர்­தித் தாக்­கு­த­லில் அவர் மாண்­ட­தா­க அமெரிக்க ராணுவம் சொன்னது.

விமான நிலை­யத் தாக்­கு­த­லுக்கு ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்பு பொறுப்­பேற்­றுக்­கொண்­டது.

மாண்ட ஐஎஸ் உறுப்­பி­னர் மீது குறி­வைத்து நங்­கர்­ஹார் மாநி­லத்­தில் வானூர்­தித் தாக்­கு­தல் நிகழ்த்­தப்­பட்­டது.

தாக்குதலின்போது மாண்டவர் மற்றோர் ஐஎஸ் உறுப்பினருடன் ஒரு வாகனத்தில் இருந்திருக்கிறார்.

இருவரும் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.

தாக்குதல் ஆப்கானிஸ்தானுக்கு வெளியிலிருந்து நிகழ்த்தப்பட்டது.

அதில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை என்று அமெரிக்க ராணுவ அதிகாரியான கேப்டன் பில் அர்பன் சொன்னார்.

காபூல் விமான நிலை­யத்­தில் நடந்த தாக்­கு­த­லில் குறைந்­தது 78 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

குறைந்­தது 13 அமெ­ரிக்கத் துருப்பு­கள், நாட்­டி­லி­ருந்து வெளி­யேற முயன்ற ஆப்­கா­னிஸ்­தான் மக்­கள் உள்­ளிட்­டோர் மாண்­டோரில் அடங்­கு­வர்.

மாண்­டோ­ரின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட 200ஆக அதி­க­ரித்­திருக்­கக்­கூ­டும் எனச் சில ஊடகங்­கள் கூறு­கின்­றன.

இச்­செயலை மன்­னிக்­கப்­போவதோ மறக்­கப்­போ­வதோ இல்லை என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறி­யி­ருந்­தார்.

இதற்­குக் கார­ண­மா­ன­வர்­க­ளைத் தேடிக் கண்டு­பி­டித்து தண்­ட­னையை அனு­ப­விக்­கச் செய்­யப்­போ­வ­தா­க­வும் திரு பைடன் சொன்­னார்.