கொவிட்-19 தொற்று நிலவரம்

கொவிட்-19 தொற்று நிலவரம்

1 mins read
9c5af1c5-f6f2-4fe7-be9a-2f155af90a0a
-

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிதாக 22,597 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. எண்ணிக்கை, நேற்று முன்தினம் பதிவானதைவிட சற்று அதிகம்.

சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மறுபடியும் இதுவரை காணாத அளவில் ஒரு நாளைக்கான கொவிட்-19 கிருமித்தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அங்கு புதிதாக 1,035 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவிலும் அண்டை நாடான நியூசிலாந்திலும் பல்வேறு பகுதிகளில் முடக்கநிலை நடப்பில் உள்ளது

ஆக்லாந்து: நியூசிலாந்தில் புதிதாக 82 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்ட அனைவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள். நியூசிலாந்தில் இதுவரை மொத்தம் 415 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் தொடக்கப் பள்ளி ஒன்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியரிடமிருந்து குறைந்தது 26 பேருக்கு டெல்டா வகை கொவிட்-19 கிருமி பரவியிருக்கிறது. அவர்களில் வகுப்பறைக்குச் சென்ற 12 மாணவர்கள் அடங்குவர்.

சிக்காகோ: அமெரிக்காவில் மான்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகில் மான்களிடையே இக்கிருமி பரவியிருப்பது இதுவே முதல் முறை.