கொவிட்-19: இயல்புநிலைக்கு திரும்பும் டென்மார்க்

1 mins read
cbbd9948-9596-4389-ad75-35a55132cc00
-

கோப்­பன்­ஹே­கன்: டென்­மார்க்­கில் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்­குள் அனைத்து கொவிட்-19 கட்­டுப்­பாடு­களும் அகற்­றப்­படும். அந்­நாட்­டில் பல­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தைத் தொடர்ந்து கொவிட்-19 கிரு­மி­யால் இனி அதன் சமு­தா­யத்­திற்கு அச்­சு­றுத்­தல் இல்லை என்று அதன் சுகா­தார அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

டென்­மார்க்­கில் 70 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. எனி­னும், மீண்­டும் சமு­தா­யம் இயங்­கு­வ­தற்­குப் பங்­கம் விளை­விக்­கும் வகை­யில் கிரு­மிப் பர­வல் உரு­வெ­டுத்­தால் அர­சாங்­கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கத் தயங்­காது என்­றும் டென்­மார்க்­கின் சுகா­தார அமைச்­சர் மேக்­னஸ் ஹியு­னிக்கே குறிப்­பிட்­டார்.