மொடர்னா தடுப்பூசி விவகாரம்: இருவர் மரணம்

மொடர்னா தடுப்பூசி விவகாரம்: இருவர் மரணம்

1 mins read
396fc150-58e7-4dd2-9fcb-5e76d6e537cb
-

தோக்­கியோ: ஜப்­பா­னில் தற்­கா­லி­க­மா­கத் தடை செய்­யப்­பட்ட மொடர்னா தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்ட 30 வய­தைத் தாண்­டிய இரண்டு ஆண்­கள் உயி­ரி­ழந்­த­னர். இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட சில நாள்­க­ளுக்­குப் பிறகு அவர்­கள் மாண்­ட­னர். சில மொடர்­னா­வின் தடுப்­பூ­சி­களின் குப்­பி­கள் மாசு­பட்­டி­ருப்­ப­தாக வந்த தக­வல்­க­ளைத் தொடர்ந்து அதன் 1.63 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை ஜப்­பான் தற்­கா­லி­க­மா­கத் தடை செய்­தது.

எனினும், ஆடவர்கள் உயி­ரி­ழந்­த­தற்குத் தடுப்­பூ­சி­ கார­ணம் என்­ப­தற்­குத் தற்­போது ஆதா­ரம் ஏதும் இல்லை என்று மொடர்­னா­வும் ஜப்­பா­னில் அதன் தடுப்­பூ­சி­களை விநி­யோ­கம் செய்­யும் ­டக்­கேடா மருந்து நிறு­வ­ன­மும் கூறின.