லாஸ் ஏஞ்சலீஸ்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் சகோதரர் ராபர்ட் எஃப் கென்னடியைக் கொன்றவரை நன்னடத்தை நிபந்தனையுடன் விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 77 வயதாகும் சிர்ஹான் சிர்ஹான் என்ற அந்தக் குற்றவாளி 1968ஆம் ஆண்டில் ராபர்ட் கென்னடியைக் கொன்றார். அச்சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கென்னடியின் மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு கறுப்பினத்தவர் உரிமைக்காகப் போராடிய மார்டின் லூதர் கிங் கொல்லப்பட்டார்.

