யுனைட்டெட்டில் ரொனால்டோ

யுனைட்டெட்டில் ரொனால்டோ

1 mins read
a03a11fd-c3af-4c94-ba2f-3f6b4fb0dab3
எதிர்பாரா வகையில் மீண்டு மான்செஸ்டர் யுனைட்டெட்டில் சேர்ந்துள்ளார் கிரிஸ்டியானோ ரொனால்டோ. படம்: இபிஏ -

மான்­செஸ்­டர்: தற்­போது உல­கின் ஆகச் சிறந்த காற்­பந்து வீர­ரா­கச் சில­ரால் கரு­தப்­படும் கிரிஸ்­டி­யானோ ரொனால்டோ மீண்­டும் மான்­செஸ்­டர் யுனைட்­டெட் அணி­யில் சேர்ந்­துள்­ளார்.

தனது பரம வைரி அணி­யான மான்­செஸ்­டர் சிட்டி அவரை வாங்­கும் எனப் பலர் எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருந்த வேளை­யில் ரொனால்­டோவை வாங்கி காற்­பந்து உலகை அதி­ர­வைத்­தது யுனைட்­டட்.

இதற்கு முன் 2004ஆம் ஆண்­டில் தனது 18வது வய­தில் யுனைட்­டெட்­டில் சேர்ந்­தார் ரொனால்டோ. அணி­யில் நட்­சத்­திர விளை­யாட்­டா­ள­ராக உரு­வெ­டுத்­தார்.

அதன் பின்­னர் ரியால் மட்­ரிட், யுவென்­டஸ் ஆகிய அணி­க­ளி­லும் மிகச் சிறப்­பாக விளை­யா­டி­னார்.

இப்­போது 36 வயது ஆன பிற­கும் ஓர் இளை­ய­ரின் துடிப்­பு­டன் விளை­யா­டி­வ­ரும் ரொனால்டோ, 12 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்டும் யுனைட்­டெட்டில் சேர்ந்து அணி­யின் ரசி­கர்­களை இன்ப அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யுள்­ளார்.

கிரிஸ்­டி­யானோ ரொனால்­டோ­வின் வருகை, மறக்­கப்­பட்ட நினைவு­களை மீண்­டும் மல­ரச் செய்­துள்­ளது.