தடுப்பூசிகளைக் கலக்க ஜப்பான் பரிசீலனை

தடுப்பூசிகளைக் கலக்க ஜப்பான் பரிசீலனை

1 mins read
8278c955-1bf3-4184-bff8-0e2a9eb085a4
தோக்கியோவில் உள்ள தடுப்பூசி நிலையம் ஒன்றில் வரிசையில் நின்ற மக்கள். படம்: இபிஏ -

தோக்­கியோ: ஆஸ்ட்­ர­ாசெ­னெக்­கா­வின் கொவிட்-19 தடுப்­பூ­சி­களை மற்ற நிறு­வ­னங்­க­ளின் தடுப்­பூ­சி­களு­டன் சேர்த்துப் போடு­வது குறித்து ஜப்­பான் ஆலோ­சித்­து­வரு­கிறது.

தடுப்­பூ­சி­க­ளைக் கூடு­த­லா­னோ­ருக்கு வேக­மா­கப் போட இவ்­வாறு செய்­வது குறித்து யோசிப்­ப­தாக அந்­நாட்­டின் தடுப்­பூ­சித் திட்­டத்­துக்­கான அமைச்­சர் டாரோ கோனோ கூறி­னார்.

இதற்­கி­டையே, தற்­கா­லி­க­மா­கத் தடை­செய்­யப்­பட்ட மொடர்னா தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்ட இரு­வ­ரின் மர­ணம் குறித்து ஜப்­பான் விசா­ரணை நடத்­தி­வ­ரு­கிறது.