சூரிச்: சுவிட்சர்லாந்தின் தடுப்பூசி நிலையங்கள் உட்பட கொவிட்-19 தடுப்பூசிக் கட்டமைப்பைக் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்படலாம் என்று அந்நாட்டின் மத்திய புலனாய்வுச் சேவை எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் நாளிதழ் ஒன்று இதனைத் தெரிவித்தது.
பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல்களை நிகழ்த்தக்கூடும் என்று புலனாய்வுச் சேவை அஞ்சுவதாக நாளிதழ் குறிப்பிட்டது.
இதுவரை, அத்தகைய தாக்குதல்கள் குறித்து வெளிப்படையான அறிகுறிகள் இல்லை என்றும் சேவை கூறியது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசித் திட்டத்தை அந்நாட்டு ராணுவம் கவனித்துக்கொள்கிறது.

