'ஐஎஸ்ஸுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்'

'ஐஎஸ்ஸுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்'

1 mins read
4f7dfa0e-791e-4efb-918f-b087b3295210
-

காபூல்: ஆப்­கா­னிஸ்­தான் தலை­நகர் காபூ­லில் அமெ­ரிக்கா ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்­புக்கு எதி­ரா­கத் தாக்கு­தல் நடத்­தி­ய­தாக ராய்ட்­டர்ஸ் செய்தித் தக­வல் கூறு­கிறது.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி சம்பவம் குறித்து மேல்­வி­வ­ரங்­கள் ஏதும் இல்லை. உயி­ரி­ழப்பு நேர்ந்­த­தா­கவோ யாரே­னும் காய­முற்­ற­தாகவோ விவ­ரங்­கள் இல்லை.

காபூல் விமான நிலை­யத்­திற்கு அருகே உள்ள வீட்­டின் மேல் ஏவு­கணைத் தாக்­கு­தல் நிகழ்த்­தப்­பட்­டது.

அதற்­கும் அமெ­ரிக்­கத் தாக்­கு­தலுக்­கும் தொடர்பு உள்­ளதா எனத் தெரி­ய­வில்லை.

காபூ­லில் இன்­னொரு தாக்­கு­தல் நிகழ்த்­தப்­ப­ட­லாம் என்று அமெரிக்க அதி­பர் ஜோ பைடன் முன்­ன­தாக எச்­ச­ரித்­தி­ருந்­தார்.

தனது ராணுவ தள­ப­தி­கள் அது குறித்து தன்­னி­டம் கூறி­ய­தா­கத் திரு பைடன் குறிப்­பிட்­டார்.

இத­னைத் தொடர்ந்து காபூல் விமான நிலைய வளா­கத்­தி­லி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறு ஆப்­கா­னிஸ்­தா­னில் உள்ள அமெ­ரிக்­கத் தூத­ர­கம் அமெ­ரிக்­கர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது.

சென்ற வாரம் வியா­ழக்­கி­ழ­மை­யன்று விமான நிலை­யத்­தில் நிகழ்த்­தப்­பட்ட தற்­கொ­லைத் தாக்­கு­த­லில் 13 அமெ­ரிக்க ராணு­வத் துருப்­பு­கள் கொல்­லப்­பட்­ட­னர்.

மேலும் 18 ராணுவ உறுப்­பி­னர்­கள் காய­முற்­ற­னர். தாக்­கு­த­லுக்கு ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்பு பொறுப்­பேற்றுக்­கொண்­டது. ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அமெ­ரிக்­கர்­களை வெளி­யேற்­றும் நட­வ­டிக்கை கடைசி கட்­டத்­தில் உள்­ளது. அது மிக­வும் அபா­ய­க­ர­மா­ன­தாக இருக்­கும் எனக் கூறப்­பட்­டுள்ளது.