பாரிஸ்: கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரை நியாயமற்ற முறையில் ஒதுக்குவதாகச் சொல்லி அங்கு நாடு முழுவதும் 160,000 பேர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். உணவகத்திற்குச் செல்வது உள்ளூர் ரயிலில் பயணம் செய்வது, போன்ற அன்றாட செயல்களில் ஈடுபடுவதற்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான மின்னிலக்க ஆவணத்தைக் காட்டவேண்டும் என்ற விதிமுறை அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதற்கு எதிராகத் தொடர்ந்து ஏழாவது வாரயிறுதியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
தலைநகர் பாரிசில் சுமார் 14,500 பேர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 16 பேர் கைதுசெய்யப்பட்டனர், மூன்று காவல்துறையினர் சற்று காயமுற்றனர்.
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினிலும் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்நாட்டின் சில பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கென கூடுதல் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

