தாய்லாந்துக்கு இவ்வாண்டு 140 மில்லியன் தடுப்பூசிகள்

பேங்­காக்: தாய்­லாந்­தில் இவ்­வாண்டு 140 மில்­லி­யன் கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தாய்­லாந்­தில் இது­வரை இல்­லாத அள­வில் கிரு­மிப் பர­வல் சூழல் மோச­மாக இருப்­ப­தால் அங்கு வேக­மா­கப் பல­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது.

எனி­னும், கிருமி பர­வு­வது மெது­வ­டை­வ­தற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­வ­தாக அரசாங்­கத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

தாய்­லாந்­தில் நேற்று புதி­தாக 16,536 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. 264 பேர் மாண்­ட­னர்.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் 23,000க்கும் அதி­க­மா­னோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

ஒரு நாளைக்கு இத்­த­னை பேரி­டையே கிருமி பர­வி­யது இதுவே முதல் முறை.

புதி­தாக தொற்று ஏற்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை குறைந்­து­வருவதால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை­யன்று தலை­ந­கர் பேங்­காக்­கி­லும் கிருமி அதி­கம் பர­வும் அபா­யம் உள்ள 28 மாநி­லங்­க­ளி­லும் சில கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டன.

அவற்­றுக்­கி­டை­யி­லான விமா­னச் சேவை­கள் மீண்­டும் தொடங்­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. 'ஏஷியா ஏவி­யே­ஷன்', 'பேங்­காக் ஏர்­வேஸ்' உள்­ளிட்ட சில நிறு­வ­னங்­கள் சில நாட்­களில் தங்­க­ளின் விமா­னச் சேவை­களை வழங்­க­வி­ருப்­ப­தாக ஏற்­கெ­னவே அறி­வித்­தன. தாய்­லாந்து, சுற்­றுப்­ப­ய­ணத் துறைக்­குப் பிர­ப­ல­மான நாடு. கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லால் அதந்தத் துறை முடங்­கிக்­கி­டக்­கிறது.

அதை மீட்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­கும் முயற்­சி­களில் அதி­கா­ரி­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்.கடந்த ஜூன் மாதம் தாய்­லாந்து அதன் மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடத் தொடங்­கி­யது. சுமார் 66 மில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட அங்கு இது­வரை கிட்டத்­தட்ட 11 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!