கொவிட்-19 தொற்றால் மாண்ட மலேசிய தலைவர்

கொவிட்-19 தொற்றால் மாண்ட மலேசிய தலைவர்

1 mins read
93b02e17-f33f-4fc3-a02e-a911a0dde2c2
-

கோலாலம்பூர்: கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்ட சாபா மாநிலத்தின் அரசியல் தலைவரான செரி லஜிம் உக்கின் நேற்று காலமானார். கிருமித்தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த அவர் உரியிழந்தார். அவருக்கு வயது 66.

இம்மாதம் 12ஆம் தேதியன்று அவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது. 14ஆம் தேதியன்று சாபா மாநிலத்தின் தலைநகர் கோத்தா கினபாலுவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார்.

அரசியல் ரீதியாக இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு மலேசியாவின் பல தலைவர்கள் திரு லஜிம்மின் குடும்பத்துக்குத் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர். முன்னாள் பிரதமர்கள் நஜிப் ரசாக், முகைதீன் யாசின் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.