கொவிட்-19 தொற்று எண்ணிக்கை

1 mins read
f2458ec4-2143-4bfc-94b1-71f94d2036ce
-

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிதாக 20,579 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பதிவானதைவிட இந்த எண்ணிக்கை சுமார் 2,000 குறைவு.

சிட்னி: ஆஸ்திரேலியாவில் புதிதாக கிருமித்தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அங்கு 1,323 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. மெல்பர்ன் நகரில் முடக்கநிலை மறுபடியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் புதிதாக 83 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாற்றப்படலாம் என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கூறினார்.