ஜோகூர் பாரு: கிருமிப் பரவல் காரணமாக கிட்டத்தட்ட கடந்த ஓராண்டு காலமாக மூடப்பட்டிருக்கும் சிங்கப்பூர்-ஜோகூர் எல்லை
களைத் திறப்பது மலேசிய புதிய பிரதமரான இஸ்மாயில் சப்ரியின் முக்கியமானவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஜோகூர் தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலேசியாவில், குறிப்பாக ஜோகூரில், கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் சிறப்பாக கையாளப்
படுவது பற்றி சிங்கப்பூருக்கு எடுத்துரைக்க பிரதமர் இஸ்மாயில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றார் அம்னோ இளைஞர் செயற்குழு உறுப்பினர் பாஸ்டியன் ஓன்.
மலேசியர்கள் அன்றாடம் சிங்கப்பூர் சென்று வருவதற்கான சரியான வழிமுறைகளை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று சிகாமட் பிரிவு இளைஞர் தலைவர், புதிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார்.
"கொவிட்-19க்கு முந்தைய காலக்கட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 200,000 மலேசியர்கள் வேலை நிமித்தமாக சிங்கப்பூருக்கு சென்று வந்தனர்," என்றார் அவர்.
தொழில்நுட்பப் பல்கலைக்கழக பேராசியர் எல்.நந்தகுமார், ஜோகூர் கடற்பாலம், இரண்டாம் இணைப்பு ஆகியவற்றை விரைவில் திறப்பது இரண்டு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் முக்கியமாக அமையும் என்றார்.

