சிட்னி: ஆஸ்திரேலியாவில் நேற்று நால்வர் கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு மாண்டோர் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தைக் (1,003) கடந்துவிட்டது.
நாளொன்றுக்கு அங்கு சரா
சரியாக இரண்டு அல்லது மூன்று மரணங்கள் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதுபோல் அன்றாடம் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை யும் (1,200) தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகளாவிய தரநிலையின்படி இந்த எண்ணிக்கை சற்று குறைவு. முடக்கநிலையால் கிருமித்தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் பொருளியல் நடவடிக்கைகளை எப்படி மீண்டும் திறப்பது என்பது குறித்த சுகாதார சவாலை எதிர்கொண்டு வருகிறது ஆஸ்திரேலியா.
தடுப்பூசி போடும் பணியைத் துரிதப்படுத்துவது, கிருமித்தொற்றுக்கு மத்தியில் வாழ்வது ஆகிய வற்றுக்கு ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

