தாய்லாந்தில் உள்நாட்டு விமானச் சேவை

தாய்லாந்தில் உள்நாட்டு விமானச் சேவை

1 mins read
8b9c6b23-cb6b-45ec-a770-51c3541e2666
-

பேங்காக்: பேங்காக் உள்ளிட்ட கொவிட்-19 கிருமிப் பரவலுக் கான ஆபத்து அதிகம் உள்ள பகுதிகளுக்குச் சில உள்நாட்டு விமானச் சேவை களைத் தொடங்கவுள்ளதாக தாய்லாந்து விமானப் போக்கு வரத்து ஆணையம் கூறி உள்ளது.

நாட்டின் பொருளியலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அது கூறியது. 75 விழுக்காட்டு பயணிகளுடன் விமானங்கள் இயங்கும். தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று மற்றும் தொற்று இல்லை என்பதற்கான சான்றையும் பயணிகள் காண்பிக்க வேண்டும்.