டோவர்: ஆப்கானிஸ்தான் தலை
நகர் காபூலில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் மரண
மடைந்த அமெரிக்க ராணுவ வீரர்
களின் உடல் சொந்த நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அஞ்சலி செலுத்தினார்.
அமெரிக்காவின் டென்வர் மாநிலத்தில் உள்ள டோவர் விமானப்
படைத் தளத்துக்குச் சென்ற அவர், தமது மனைவி ஜில் பைடனுடன் இணைந்து மரணமடைந்த வீரர்
களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
காபூல் விமான நிலையத்துக்கு வெளியே சென்ற வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் 13 அமெரிக்கப் படையினர் உட்பட ஆப்கானிஸ்தானியர் பலரும் கொல்லப்பட்டனர்.
மாண்ட அனைவரும் 31 வயதுக்கும் குறைவானவர்கள். அவர்களில் ஐவர் 20 வயதே ஆனவர்கள். தலிபான்-அமெரிக்கப் படை
களுக்கு இடையிலான போரும்
20 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கியது.
இந்நிலையில் இன்றோடு அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதுமாக வெளியேற உள்ளதால், சென்ற இரண்டு வாரங்களாக அமெரிக்கர்கள், பாதிக்கப்படக்கூடிய ஆப்கானியர்களை மீட்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது.
அமெரிக்க வீரர்களின் மரணத்தை அடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பைடனை விமர்சித்து வருகின்றனர்.

