மலேசியா: கடும் நிதிப் பற்றாக்குறை

மலேசியா: கடும் நிதிப் பற்றாக்குறை

1 mins read
dd5e67bf-a0b2-4ad3-b34f-152bef076179
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் 2021ஆம் ஆண்­டிற்­கான நிதிப் பற்­றாக்­குறை, பத்­தாண்­டு­க­ளுக்கு முன்­னர் உலக நிதி நெருக்­க­டி­யின் போது இருந்­த­தைப் போன்ற ஒரு நிலைக்­குச் செல்­லக்­கூ­டும் என்று முதல்­மு­றை­யாக வெளி­யி­டப்­பட்ட வர­வு­செ­லவு திட்­டத்­திற்கு முந்­தைய அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மலே­சியா நேற்று தனது 64வது சுதந்­திர தினத்­தைக் கொண்­டா­டிய நாளில் அர­சாங்­கம் இந்த அறிக்­கையை வெளி­யிட்­டது.

அதில் இவ்­வாண்­டுக்­கான நிதிப் பற்­றாக்­குறை 6.5 விழுக்­காடு முதல் 7 விழுக்­கா­டாக இருக்­கும் என்று கூறப்­பட்­டுள்­ளது. முன்பு மதிப்­பி­டப்­பட்ட 5.4 விழுக்­காட்­டை­விட இது அதி­க­மா­கும்.

2008-2009ஆம் ஆண்­டில் நில­விய உல­க­ளா­விய நிதி நெருக்­க­டி­யின்போது மலே­சி­யா­வின் நிதி பற்­றாக்­குறை 6.7 விழுக்­காட்டை எட்­டி­யது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கார­ண­மாக மலே­சி­யா­வில் மீண்­டும் மீண்­டும் முடக்­க­நிலை கொண்டு வரப்­பட்­ட­தால் அதன் பொரு­ளா­தா­ரம் மிக­வும் பாதிக்­கப்­பட்­டது.

அங்கு நிலவும் சுகா­தார, பொரு­ளா­தார நெருக்­கடி கடை­சி­யில் அர­சாங்க மாற்­றத்­திற்கு வழி­

வ­குத்­தது.

இதற்கிடையே, உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­து

­வ­தற்­கும் நிலை­யான பொருளியல் மீட்பை உறுதி செய்­வ­தற்­கும் கடன் வரம்பை அதி­க­ரிக்க வேண்­டிய அவ­சி­யம் உள்­ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது.

மலே­சி­யா­வின் 2022ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை நிதி அமைச்­சர் ஜஃப்ருல் அஜீஸ் வரும் அக்­டோ­பர் மாதம் தாக்­கல் செய்­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த வரவுசெலவுத் திட்டம், கொவிட்-19 நெருக்­க­டி­க்கு மத்தி யில் நாட்டின் பொரு­ளா­தா­ரம் மீண்டு வரும் என்ற எதிர்­பார்ப்­பின் அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கப்­படும் என்று வரவுசெலவு திட்டத்திற்கு முந்தைய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.