மேன்யூவில் இணைந்தார் ரொனால்டோ

மேன்யூவில் இணைந்தார் ரொனால்டோ

1 mins read
79acb580-dd66-45e8-9233-c13a7c6a7196
-

மான்­செஸ்­டர்: போர்ச்­சு­கல் காற்­பந்து நட்­சத்­தி­ர­மான கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ, மீண்­டும் இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான மான்­செஸ்­டர் யுனை­டெட் குழு­விற்கே திரும்பி

உள்­ளார்.

யுவெண்­டஸ் குழு­விற்­காக விளை­யாடி வந்த இவர் 23 மில்­லி­யன் யூரோ­விற்கு (36.6 மில்­லி­யன் வெள்ளி) இரண்டு ஆண்டு ஒப்­பந்­தத்­தில் மேன்­யூ­வில் இணைந்து

உள்­ளார். இதற்கு முன்பு 2003 முதல் 2009ஆம் ஆண்டு வரை­யில் மேன்யூ ­விற்­காக விளை­யா­டிய ரொனால்டோ, அப்­போது எட்டு கிண்­ணங்­களை வென்­றார்.

யுவெண்­டஸ் குழு­வில் இருந்து ரொனால்டோ வெளி­யே­று­வ­தைக் அக்­குழு நிர்­வா­கம் திங்­கட்­கி­ழமை உறு­திப்­ப­டுத்­தி­யது.

இதற்கிடையே, ரொனால்டோ மான்­செஸ்­டர் சிட்டி குழு­விற்கு செல்­லக்­கூ­டும் என்று பேசப்­பட்டு வந்த நிலை­யில், தற்­போது அதன் பரம எதி­ரி­யான மான்­செஸ்­டர் யுனை­டெட் குழு­வில் அவர் இணைந்துள்­ளார்.

வரும் 11ஆம் தேதியன்று ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறவுள்ள நியூகாசல் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ மேன்யூ விற்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.