செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
cdf9071a-f504-43bf-8b15-304196242a4f
-

தண்ணீர் விநியோகத்தில் தடை

பெட்டாலிங் ஜெயர: நீர் விநியோக நிலையம் ஒன்றில் துர்நாற்றம் வீசுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவில் சிலாங்கூரின் 463 பகுதிகளில் திட்டமிடப்படாத தண்ணீர் விநியோகத் தடை இருக்கும் என்று சிலாங்கூர் தண்ணீர் வாரியம் தெரிவித்துள்ளது. நேற்றுக் காலை ஜென்டெராம் ஹிலீர் சுத்திகரிக்கப்படாத நீர் விநியோக நிலையத்தில் கண்டறியப்பட்ட துர்நாற்றத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிலாங்கூர் தண்ணீர் வாரியம் கூறியது.

போலி தடுப்பூசி சான்றிதழுக்கு லஞ்சம்; ஆணையம் விசாரணை

கோலா­லம்­பூர்: தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள விரும்­பா­த­வர்­களிடம் லஞ்­சம் வாங்­கிக்­கொண்டு தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக மருத்­து­வர்­கள் போலி சான்­றி­தழ்­கள் கொடுப்­ப­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளார் எம்­ஏ­சிசி எனும் மலே­சிய ஊழல் தடுப்பு ஆணை­யத்­தின் தலை­வர் அஸாம் பாகி.

"இது­கு­றித்து எம்­ஏ­சி­சிக்கு இது­வரை எந்தப் புகா­ரும் வரவில்லை என்­றா­லும் இது­போன்ற முறை­கேடு நடந்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் இடங்­களில் உள­வுத்­துறை மூலம் விசாரணை நடத்­து­வோம்," என்­றார் அவர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மறுப்பவர்கள் மீதான நட­வடிக்கை குறித்து ஆகஸ்ட் அல்­லது செப்­டம்­ப­ரில் முடிவு செய்­யப்­படும் என்று முந்தைய பிர­த­மர் முகை­தீன் யாசின் கூறி­யி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் கடனுதவி

ஜெருசேலம்: பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட உயர்மட்ட கூட்டத்திற்குப் பிறகு, 150 மில்லியன் அமெரிக்க டாலர் (201.5 மில்லியன் வெள்ளி) தொகையை பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் கடனாகக் கொடுக்கும் என்று இஸ்ரேல் அதிகாரிகள் கூறினர். இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு பொறுப்பு வகிக்கும் தற்காப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனுடனான ரகசியப் பேச்சுவார்த்தைக்காக ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீன சுய ஆட்சி பகுதிக்குச் சென்றார்.