ஐடா சூறாவளி: நியூயார்க், நியூஜெர்சியில் அவசரநிலை

ஐடா சூறாவளி: நியூயார்க், நியூஜெர்சியில் அவசரநிலை

1 mins read
148be5c7-f48c-4113-80f2-c686fd2e3e7b
மேரிலாந்தின் அன்னாபோலிஸ் பகுதியில் ஐடா சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தைப் பயனீட்டுத் துறை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். படம்: ஏஎஃப்பி -

நியூ­யார்க்: வடகிழக்கு அமெ­ரிக்­கா­வைப் புரட்டி போட்ட ஐடா சூறா­வ­ளிக்கு குறைத்து ஒன்பது பேர் மாண்­டு­விட்­ட­னர்.

ஐடா சூறா­வளி கார­ண­மாக பெய்த பலத்த கன­ம­ழை­யால் பல பகுதிகளில் வெள்­ளப்பெருக்கு ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து நியூ­யார்க் மற்­றும் நியூ­ஜெர்சி பகு­தி­களில் முதல்

முறை­யாக வெள்ள அபாய அவ­சர நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நியூ­யார்க்­கின் சென்ட்­ரல் பார்க் பகு­தி­யில் ஒரு மணி நேரத்­தில் எட்டு செ.மீட்­டர் மழை பதி­வா­ன­தாக தேசிய வானிலை மையம் அறி­வித்­தது.

நியூ­யார்க் மேயர் பில் டி பிளாஸோ 'வர­லாறு காணாத வானிலை' என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி உள்ள புகைப்­ப­டங்­கள், சுரங்­கப்­

பா­தை­கள், ரயில் நிலை­யங்­கள், வீடு­கள், சாலை­களில் வெள்­ளம் சூழ்ந்­துள்­ள­தைக் காட்­டி­யது.

மின்­கம்­பங்­களும் மரங்­களும் வேரோடு சாய்ந்து கிடந்த­தை­யும் காண முடிந்­தது.

இதை­ய­டுத்து பெரும்­பா­லான சுரங்­கப்­பா­தை­கள் மூடப்­பட்­டுள்­ளன. ரயில், விமா­னச் சேவை­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

தங்­கள் வீட்­டின் வெள்­ளம் சூழ்ந்த அடித்­த­ளத்­தில் சிக்­கிக் கொண்டு நால்­வர் சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­னர்.

வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்ட வாக­னம் ஒன்­றில் இருந்து 70 வயது மதிக்­கத்­தக்க ஆட­வர் ஒரு­வ­ரின் சட­லம் மீட்­கப்­பட்­ட­தாக நியூ­ஜெர்சி மேயர் சொன்­னார்.

பாசாய்க் பகு­தி­யில் சூறா­வ­ளி­யால் ஒன்பது வீடு­கள் சேத­ம­டைந்­த­தா­க­வும் கூறப்­பட்­டுள்­ளது.

நியூ­ஜெர்சி மாநி­லத்­தில் கெர்னி பகு­தி­யில் தபால் நிலைய கட்­ட­டத்­தின் கூரை இடிந்து விழுந்­த­தை­

ய­டுத்து, இடி­பா­டு­களில் சிக்­கி­ய­வர்­களை மீட்­கும் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.