நியூயார்க்: வடகிழக்கு அமெரிக்காவைப் புரட்டி போட்ட ஐடா சூறாவளிக்கு குறைத்து ஒன்பது பேர் மாண்டுவிட்டனர்.
ஐடா சூறாவளி காரணமாக பெய்த பலத்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதிகளில் முதல்
முறையாக வெள்ள அபாய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில் ஒரு மணி நேரத்தில் எட்டு செ.மீட்டர் மழை பதிவானதாக தேசிய வானிலை மையம் அறிவித்தது.
நியூயார்க் மேயர் பில் டி பிளாஸோ 'வரலாறு காணாத வானிலை' என்று குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள புகைப்படங்கள், சுரங்கப்
பாதைகள், ரயில் நிலையங்கள், வீடுகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதைக் காட்டியது.
மின்கம்பங்களும் மரங்களும் வேரோடு சாய்ந்து கிடந்ததையும் காண முடிந்தது.
இதையடுத்து பெரும்பாலான சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. ரயில், விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
தங்கள் வீட்டின் வெள்ளம் சூழ்ந்த அடித்தளத்தில் சிக்கிக் கொண்டு நால்வர் சடலமாக மீட்கப்பட்டனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்றில் இருந்து 70 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக நியூஜெர்சி மேயர் சொன்னார்.
பாசாய்க் பகுதியில் சூறாவளியால் ஒன்பது வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
நியூஜெர்சி மாநிலத்தில் கெர்னி பகுதியில் தபால் நிலைய கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததை
யடுத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

