இலங்கை நாட்டவர் சுட்டுக் கொலை

நியூசிலாந்தில் பயங்கரவாதத் தாக்குதலில் போலிசார் அதிரடி நடவடிக்கை

ஆக்­லாந்து: நியூ­சி­லாந்து தலை­ந­கர் ஆக்­லாந்­தில் உள்ள பேரங்­கா­டி­யில் நேற்று குறைந்­தது ஆறு பேரைக் கத்­தி­யால் குத்­திய நப­ரைப் போலி­சார் சுட்­டுக் கொன்­ற­னர். அவர்­களில் மூன்று பேர் கவ­லைக்­கு­ரிய நிலை­யில் உள்­ள­தா­கத் தெரி­விக்­கப்பட்­டது.

தாக்­கு­தல் நடத்­தி­ய­வர் இலங்­கைக் குடி­ம­கன் என்­றும் அவரை நியூ­சி­லாந்து போலி­சார் ஐந்து ஆண்டுக­ளா­கக் கண்­கா­ணித்து வந்­த­னர் என்­றும் அந்­நாட்­டுப் பிர­த­மர் ஜெசிந்தா ஆர்­டன் தெரி­வித்­தார்.

பெயர் தெரிவிக்கப்படாத அந்த நபர், ஐஎஸ் பயங்­க­ர­வா­தக் குழு­வைப் பார்த்து தூண்­டப்­பட்­ட­தா­க­வும் தாக்கு­தல் தொடங்­கிய 60 விநாடி களுக்குள் போலி­சார் அவரை சுட்டுக் கொன்­ற­தா­க­வும் திரு­வாட்டி ஆர்­டன் கூறி­னார்.

ஆக்­லாந்­தின் நியூலின் வட்­டா­ரத்­தில் உள்ள பேரங்­கா­டி­யில் பிற்­ப­க­லில் தாக்­கு­தல் நடந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பேரங்­கா­டிக்­குச் சென்ற அந்த நபர் அங்கு அல­மா­ரி­யில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த கத்­தியை எடுத்து, அரு­கில் இருந்­த­வர்­க­ளைக் குத்­தத் தொடங்­கி­னார் என்று நியூசி­ லாந்து ஊட­கங்­கள் கூறின.

அவர் வீட்­டி­லி­ருந்து கிளம்­பி­ய­தி­லி­ருந்து போலி­சார் அவ­ரைத் பின்­தொ­டர்ந்தனர் என்­றும் தாக்­கு­தல் நடந்த நேரத்­தில் அவர்­கள் அருகே இருந்­த­னர் என்­றும் திரு­வாட்டி ஆர்­டன் கூறி­னார்.

அந்­தத் தாக்­கு­தலை வெறுக்­கத் தக்க செயல் என்று வரு­ணித்த திரு­வாட்டி ஆர்­டன், அதைத் தனி நபர் நடத்­தி­ய­தா­க­வும் எந்த சம­ய­மும் நடத்­த­வில்லை என்­றும் கூறி­னார். அச்­செ­யல்­க­ளுக்கு அவர் மட்­டுமே பொறுப்பு என்­றார் அவர்.

சம்­ப­வத்தை நேரில் பார்த்­த­வர்­கள் கத்­திக்­குத்­துக் காயங்­க­ளு­டன் பலர் தரை­யில் கிடந்­த­தா­கக் கூறி­னர்.

தாக்­கு­தல் பற்றி சமூக ஊட­கங் களில் பதி­வி­டப்­பட்ட காணொ­ளி­கள், அங்கு பெரும் குழப்­பம் நிலவி ­ய­தை­யும் தாக்­கு­தல் தொடங்­கி­ய­போது பேரங்­கா­டி­யி­லி­ருந்து பலர் தப்பி ஓடி­ய­தை­யும் காட்­டின. பின்­னர் சற்று நேரத்­தில் துப்­பாக்­கியால் சுடும் சத்தம் ஆறு­முறை கேட்­டது.

தாக்­கு­தலை நடத்­திய இலங்கை நாட்­ட­வர், 2011ஆம் ஆண்டு நியூ சிலாந்­துக்­குச் சென்­றார். 2016ஆம் ஆண்­டி­லி­ருந்து அவர் பின்­பற்­றிய சித்­தாந்­தத்­தால் அவரை போலி­சார் நோட்­ட­மிட்டு வந்­த­னர்.

கடந்த சில மாதங்­க­ளாக அவரை அதி­கா­ரி­கள் தீவி­ர­மா­கக் கண்­கா­ணித்து வந்­த­னர் என்­றும் அவர் பயங்­க­ர­வா­தக் கண்­கா­ணிப்பு பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தார் என்­றும் கூறப்­பட்­டது.

ஆனால் நேற்று வரை தடுத்து வைக்­கும் அள­வுக்கு அவர் எந்­தக் குற்­றத்­தை­யும் புரி­ய­வில்லை என்று திரு­வாட்டி ஆர்­டன் குறிப்­பிட்­டார்.

கடந்த 2019 மார்ச் 5ல் கிரைஸ்ட்­சர்ச் நக­ரில் இரண்டு பள்­ளி­வாசல்­களில் ஒரு­வன் மனம்­போ­ன­போக்­கில் கண்­ணில் பட்­ட­வர்­களை சுட்­ட­தால் 51 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நியூசிலாந்து தொடர்ந்து விழிப்பு நிலையில் இருந்து வருகிறது. சந்தேக நபர்கள் கண்காணிக்கப் பட்டு வருகின்றனர்.

கடந்த மே மாதத்திலும் டன்எடினில் உள்ள பேரங்காடியில் நடந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் நால்வர் காயம் அடைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!