மலேசியாவில் ெதாற்று குறைகிறது

மலேசியாவில் ெதாற்று குறைகிறது

2 mins read
a715dc58-5b4e-4c18-8457-f6b0d26ade1e
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் நேற்று ஒரே நாளில் 20,000க்கும் குறை­வாக 19,378 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­னது.

சிலாங்­கூ­ரில் மட்­டும் ஆக அதி­க­மாக நேற்று 3,613 பேர் புதி­தாக பாதிக்­கப்­பட்­ட­னர் என்று டுவிட்­டர் பதி­வில் சுகா­தா­ரத் துறை இயக்­கு­நர் ஜென­ரல் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரி­வித் ­தார்.

சிலாங்­கூ­ருக்கு அடுத்­த­தாக சர­வாக்(2,464), சாபா­வில் (2,404) அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

ஜோகூ­ரில் 2,331 சம்­ப­வங்­களும் பினாங்­கில் 1,470 சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளன.

இதற்­கி­டையே கிரு­மித்­தொற்றை முழு­மை­யாக ஒழிக்க முடி­யா­த­தால் அத­னு­டன் சேர்ந்து வாழ மக்­களை அர­சாங்­கம் ஆயத்­தப்­ப­டுத்தி வரு­கிறது.

முடி­வில்லா கொவிட்-19 கிருமியுடன் வாழப் பழக வேண்­டும் என்று மலே­சி­யா­வின் புதிய பிர­த­ம­ராக பொறுப்பு ஏற்­றுள்ள இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­பின் நிர்­வா­கம் வலி­யு­றுத்தி வரு­கிறது.

மலே­சி­யா­வில் நேற்று வரை 47.2 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுள்­ள­னர் என்று பெர்­னாமா தகவல் தெரிவிக்கிறது.

நாட்­டின் ஒட்­டுெ­மாத்த மக்­கள்­தொ­கை­யில் 47.2 விழுக்­காடு அல்­லது 15,429,300 தனிப்­பட்­ட­வர் ­களுக்கு முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுள்­ளதை கொவிட்-19 தடுப்­பூசி விநி­யோக உத்­த­ர­வாத சிறப்­புக் குழு­வின் (ஜேகே­ஜே­ஏவி) புள்ளி­ வி­வ­ரங்­கள் காட்­டு­கின்­றன.

தடுப்­பூசி நில­வ­ரத்­தைக் காட்­டும் குழு­வின் வரை­ப­டம் நேற்று டுவிட்­ட­ரில் பகிர்ந்­து­கொள்­ளப்­பட்­டது. ஏறக்­கு­றைய 20,115,233 தனிப்­பட்­ட­வர்­கள், அதா­வது 61.6 விழுக்­காட்­டி­ன­ருக்கு குறைந்­தது ஒரு தடுப்­பூ­சி­யா­வது போட்­டுள்­ளதை அந்த வரை­ப­டம் காட்­டி­யது.

கொவிட்-19 தேசிய தடுப்­பூசி இயக்­கத்­தின் கீழ் மொத்­தம் போடப்­பட்ட தடுப்­பூ­சி­க­ளின் எண்­ணிக்கை 35,519,754க்கு அதிகரித்­துள்­ளது.

ஜேகேஜேஏவி புள்ளி விவ ரங்களின்படி இரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட பெரியவர்களின் எண்ணிக்கையும் 65.1லிருந்து 65.9 விழுக்காட்டுக்கு கூடியுள்ளது.