காபூல்: ஆப்கானிஸ்தானில் சுமார் 250 பெண் நீதிபதிகள், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் தப்பியோட முயற்சி செய்து வருகின்றனர். முந்தைய அரசாங்கத்தில் பெண் நீதிபதிகளால் தண்டிக்கப்பட்டவர்களை தற்போதைய தலிபான் படையினர் விடுவித்து உள்ளனர். இதனால் அண்மைய வாரங்களாக சில பெண் நீதிபதிகள் தப்பி வெளியேறிவிட்டனர்.
ஆனால் இன்னமும் ஏராள மானவர்கள் ஆப்கானிஸ் தானில் சிக்கியுள்ளனர்.
அவர்களும் தப்பிக்கும் முயற்சிகளை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

