இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளிலிருந்து வருவோருக்கான பயணத் தடையைத் தளர்த்தும் பிலிப்பீன்ஸ்

இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளிலிருந்து வருவோருக்கான பயணத் தடையைத் தளர்த்தும் பிலிப்பீன்ஸ்

1 mins read
9fde5e95-d782-4a46-9349-d54f794a8139
-

கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக 10 நாடுகளிலிருந்து வர விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை பிலிப்பீன்ஸ் தளர்த்தியுள்ளது.

இதன்படி இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை, நேப்பாளம், ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஓமான், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலிருந்து பிலிப்பீன்சுக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்று பிலிப்பீன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த நாடுகளிலிருந்து வருவோருக்கான பயணத் தடை நாளை மறுதினம் நீக்கப்படும் என அதிபர் பேச்சாளர் இன்று தெரிவித்தார்.