ஜெசின்டா ஆர்டன்: தாக்குதல் நடத்தியவரை தடுப்புக் காவலில் வைத்திருக்க முடியவில்லை

2 mins read
61b52fd9-9ad8-4af0-b140-c53b58b2da21
நியூசிலாந்துப் பிரதமர் ஜெசின்டா ஆர்டன். படம்: ஏஎஃப்பி -

வெலிங்­டன்: நேற்று முன்­தி­னம் நியூ­சி­லாந்து பேரங்­கா­டி­யில்

பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல் நடத்­திய ஆட­வ­ரைக் கடந்த ஐந்து ஆண்டு களாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் கண்­கா­ணித்து வந்­­த­தாக நியூ­

சி­லாந்­துப் பிர­த­மர் ஜெசின்டா

ஆர்­டன் தெரி­வித்­தார்.

ஆனால் அவ­ரைத் தடுப்­புக் காவ­லில் வைத்­தி­ருக்க சட்­டம் இடம் கொடுக்­க­வில்லை என்­றார் அவர்.

ஐஎஸ் பயங்­க­ர­வாத அமைப்­பின் சித்­தாந்­தத்­தால் ஈர்க்­கப்­பட்ட 32 வயது இலங்கை நாட்­ட­வர் கடந்த ஜூலை மாதம் விடு­விக்­கப்­பட்­டார்.

மாண­வ­ருக்­கான விசா மூலம் அவர் நியூ­சி­லாந்­துக்கு வந்­த­தா­க­வும் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­

க­ளுக்கு ஆத­ர­வாக 2016ஆம் ஆண்­டில் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­ட­தும் அதி­கா­ரி­க­ளின் பார்வை அவர் மீது திரும்­பி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

கத்தி, அனு­ம­திக்­கப்­ப­டாத பொருள் ஆகி­ய­வற்றை வைத்­தி­ருந்த குற்­றத்­துக்­காக 2018ஆம் ஆண்­டில் அவர் கைது செய்­யப்­பட்­டார்.

தனி ஆளாக இருந்து தாக்­கு­தல் நடத்த அவர் திட்­ட­மிட்­டி­ருந்­த­தாக அப்­போது சந்­தே­கிக்­கப்­பட்­டது.

தடுப்­புக் காவ­லில் இருந்­த­போது அதி­கா­ரி­க­ளைத் தாக்­கி­ய­தாக அவர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

ஆனால் நியூ­சி­லாந்­தின் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச் சட்­டத்­தின்­கீழ் அவர் மீது குற்­றச்­சாட்­டு­க­ளைச் சுமத்த மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­கள் தோல்­வி­யில் முடிந்­தன.

நேற்று முன்­தி­னம் ஆக்­லாந்­தில் உள்ள பேரங்­கா­டி­யில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து, அங்­கி­ருந்து ஏழு பேரை அவர் தாக்­கி­னார்.

அவர்­களில் மூவ­ரின் உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ளது.

தாக்­கு­தல்­ நடத்தியவரைக் கண்­கா­ணிக்­கும் பொறுப்பு வகித்த போலிஸ் அதி­கா­ரி­கள் அவ­ரைத் துப்­பாக்­கி­யால் சுட்­டுக் கொன்­ற­னர்.

நீதி­மன்ற உத்­த­ரவு கார­ண­மாக அந்த ஆட­வரை நாடு கடத்­தா­த­தற்­கான கார­ணத்தை வெளி­யிட முடி­ய­வில்லை என்­றார் திரு­வாட்டி ஆர்­டன்.

இந்­நி­லை­யில், நாட்­டின் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச் சட்­டங்­களை மேலும் கடு­மை­யாக்­கப்­போ­வ­தாக திரு­வாட்டி ஆர்­டன் சூளு­ரைத்­தார்.

பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளைத் திட்­ட­மி­டு­வ­தை­யும் குற்­ற­மாக்க, மசோதா தாக்­கல் செய்­யப்­படும் என்­றார் அவர்.

இதற்­கி­டையே, நியூ­சி­லாந்­தில் உள்ள பேரங்­கா­டி­கள் விற்­ப­னைக்­காக அல­மா­ரி­களில் வைக்­கப்­பட்­டி­ருந்த கத்­தி­களை அகற்­றி­விட்­டன.