பாரிஸ்: கடைத்தொகுதிகளுக்குள் நுழைவதற்கு முன்பு சுகாதார அட்டையைக் காட்ட வேண்டும் என கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டைத் தளர்த்துவது குறித்து பிரெஞ்சு அரசாங்கம் பரிசீலினை செய்து வருகிறது.
இந்தக் கட்டுப்பாட்டின் காரணமாக வர்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் அதிருப்திக் குரல் எழுப்பின.

