பெண்களின் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கிய தலிபான்

பெண்களின் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கிய தலிபான்

1 mins read
78488560-8c30-4ef3-826d-a78235d7d617
-
Google News Preferred Icon

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நடந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தை தலிபானிய போராளிகள் வன்மத்துடன் அடக்கினர். அந்நாட்டை பலவந்தமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தலிபானுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் உருவாகி வருகையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அரசாங்கத்தில் பெண்களின் பங்கும் இருக்கவேண்டும் என முழக்கமிட்டு வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை தலிபான் அதிகாரிகள் கோலால் அடித்துத் துன்புறுத்தியதாகத் தகவல் வெளிவந்துள்ளது. பெண்களின் உரிமைகளுக்குக் குறுக்கே நிற்கப்போவதில்லை என தலிபான் தலைவர்கள் கூறி வந்ததற்கு எதிராக அமைந்திருக்கிறது இந்தச் செயல்.

1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்திருந்த தலிபான், கடந்த மாதம் மீண்டும் ஆட்சியைப் பெற்றது.