ஆப்கானில் உள்நாட்டுப் போர் மூளும் அபாயம்

1 mins read
0a8de54c-a5dc-43cc-a3e2-6d9a7391858c
-

காபூல்: ஆப்கானிஸ்தானில் எதிரிகள் வசமுள்ள பஞ்ச்ஷிர் பகுதியைக் கைப்பற்ற தலிபான் படையினர் நேற்று கடுமையாகப் போரிட்டனர். உள்நாட்டுப் போர் மூளும் அபாயமுள்ளதாக அமெரிக்கா எச்சரித்த வேளையில் இந்தச் சண்டை நடைபெற்றது. இதற்கிடையே அங்கு திடீரென மூண்ட பெண்கள் போராட்டத்தை தலிபான் படையினர் அடக்கியுள்ளனர். தலிபான் போராளிகள் தங்களைத் தாக்கியதாக சில பெண்கள் கூறியுள்ளனர்.