பெண்ணைச் சீரழித்து, கொன்ற இந்தியர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

பெண்ணைச் சீரழித்து, கொன்ற இந்தியர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

1 mins read
bc12a2c1-ad9a-442b-84ff-4325a78f3d6b
-

பினாங்கு: மாடு மேய்த்து தொழில் நடத்தி வந்த எம்.கிரு­பா­க­ரன் (29), போதைப்­பொ­ருள் தொடர்­பான இரண்டு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் 40 வயது மாது ஒரு­வ­ரைக் கொன்ற குற்­றச்­சாட்­டை­யும் நேற்று ஒப்­புக்­கொண்­டார்.

மலே­சி­யா­வின் சுங்கை ஜாவி பகு­தி­யில் அமைந்­துள்ள லீ லிங் டீ என்ற மாதின் வீட்­டுக்­குள் கடந்த மாதம் 28ஆம் தேதி­யன்று அதி­காலை 3 மணி­ய­ள­வில் அத்­து­மீ­றிச் சென்ற கிரு­பா­க­ரன், தூங்­கிக் கொண்­டி­ருந்த பெண்ணை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தி­ய­து­டன் அசை­யா­மல் இருந்த அவ­ரது உட­லைக் கட்­டி­லுக்கு அடி­யில் மறைத்­தும் வைத்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது. பின்­னர், வீட்­டி­லி­ருந்து கைபேசி, ரொக்­கம், பெண்­ணின் நகை ஆகி­ய­வற்­றை­யும் ஆட­வர் கள­வா­டி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

குற்­றச்­சாட்டை நேற்று வாசித்­த­போது, நிதா­ன­மா­கக் காணப்­பட்ட கிரு­பா­க­ரன் அதைப் புரிந்­து­கொண்­ட­தாக தலை­ய­சைத்­தார்.