மணிலாவில் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

மணிலாவில் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

2 mins read
d8dada02-f95a-4f7b-94c2-65fd90f105ea
-

மணிலா: பிலிப்­பீன்ஸ் தலை­ந­கர் மணி­லா­வில் பொது­மக்­கள் நட­மாட்­டத்­திற்­கான கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தும் முடிவை அதி­கா­ரி­கள் ஒத்திவைத்­துள்­ள­னர்.

தற்­போ­தைய கொவிட்-19 கட்டுப் ­பா­டு­கள் செம்­டம்­பர் 15ஆம் ேததி வரை நீடிக்­கும் என்று அதி­பர் மாளிகை பேச்­சா­ளர் ஹேரி ரோக் நேற்று முன்­தி­னம் அறி­வித்­தி­ருந்­தார். இதை­ய­டுத்து பிலிப்­பீன்ஸ் பொரு­ளி­ய­லில் மூன்­றில் ஒரு பங்கை வகிக்­கும் மணிலா நக­ரம் கடு­மை­யா­ன கட்­டுப்­பா­டு­க­ளு­டன் முடக்­கப்­பட்­டுள்ளது.

இதனை மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட சமூக தனி­மைப்­ப­டுத்­து­தல் என்று திரு ரோக் குறிப்­பிட்­டுள்­ளார்.

உண­வ­கங்­களில் உணவை வாங்­கிச் ெசல்ல மட்­டும் அனு­மதிக்­கப்­படும். அழகு நிலை­யங்­கள், முடி திருத்­தும் நிலை­யங்­கள் மூடப்­ப­ட்­டி­ருக்­கும்.

நோய்க் கிருமி பர­வும் குழு­மங்­களை இலக்­கா­கக் கொண்ட முன்­னோடி கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அதி­பர் மாளிகை அறிக்கை குறிப்­பிட்­டது. இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் நேற்று முதல் அம­லுக்கு வந்­தது.

நாட்­டின் பொரு­ளி­ய­லுக்கு முக்­கிய நக­ர­மான மணிலா முடங்­கி­யி­ருப்­ப­தால் 74 பில்­லி­யன் பெசோ (S$2 பில்­லி­யன்) இழப்­பீடு ஏற்­படும் என்று பொரு­ளி­யல் திட்ட செய­லா­ளர் கார் சுவா தெரி­வித்­துள்­ளார்.

இருந்­தா­லும் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி அடுத்த ஆண்டு இறு­தி­யில் அல்­லது 2023 முற்­ப­கு­தி­யில் கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு முந்­தைய நிலைக்­குத் திரும்­பும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

பிலிப்­பீன்­சில் தின­சரி தொற்­றுச் சம்­ப­வங்­களும் தொடர்ந்து அதி கரித்து வரு­கின்­றன. செவ்­வாய்க்­கி­ழமை நில­வ­ரப்­படி 2.1 மில்­லி­யன் பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர். கடு­மை­யான கட்­டுப் பாடு­க­ளால் வேலை வாய்ப்­பு­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே பிலிப்­பீன்ஸ் நாண­யம் தொடர்ந்து 4வது நாளாக நேற்­றும் பல­வீ­ன­ம­டைந்­துள்­ளது.

அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான பரி­வர்த்­த­னை­யில் அந்த நாண­யத்­தின் மதிப்பு நேற்று 0.3 விழுக்­காடு சரிந்தது.