ஆப்கானிஸ்தானில் இரண்டு செய்தியாளர்களுக்கு அடி, உதை

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான் படையினர் திருந்திவிட்டவர்களைப் போல தோற்றமளித்தாலும் அவர் களுடைய உண்மையான உருவம் நாளுக்கு நாள் தெளிவாகி வரு கிறது.

அண்மையில் காபூல் பெண்கள் அடிப்படை உரிமை கேட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து செய்தி சேகரித்து வெளியிட்ட இரண்டு செய்தியாளர் களுக்கு அடி, உதை விழுந்ததாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
டாக்கி டர்யாடி, நீமட் நாக்டி ஆகிய இருவரும் காபூலைத் தளமாகக் கொண்டு செயல்படும் எட்டி லாட்-இ-ரோஸ் எனும் ஊடகத்தின் செய்தியாளர்கள். இருவரும் செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டதாக ‘ஸ்கை நியூஸ்’ தகவல் தெரிவித்தது.

தலிபான் அதிகாரிகள் இரு வரையும் போலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரு வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். பின்னர் இருவரும் மோசமாக தாக்கப்பட்டதாக எட்டிலாட்-இ-ரோஸை மேற்கோள்காட்டி ஸ்கை நியூஸ் கூறியது. மறுநாள் புதன் கிழமை விடுவிக்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருவரின் முகத்திலும் முதுகிலும் ரத்தக் காயங்கள் காணப்பட்டன. எட்டிலாட்-இ-ரோஸ் தலைமை ஆசிரியரான ஸாக்கி டாரியாடி, தலிபான் படையினரால் தடுத்து வைக்கப்பட்ட இரு சகாக்களும் நான்கு மணி நேரம் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். கொடூரமாகத் தாக்கப்பட்டதால் அவர்கள் நான்கு முறை சுயநினைவை இழந்ததாகவும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!