அவசரநிலையை நீட்டிக்க ஜப்பான் திட்டம்

அவசரநிலையை நீட்டிக்க ஜப்பான் திட்டம்

1 mins read
36305c4b-ee89-4d19-b284-75b2cfbfb7c5
-

தோக்­கியோ: ஜப்­பா­னிய அர­சாங்­கம், தோக்­கியோ மற்­றும் நாட்­டின் முக்­கிய பகு­தி­களில் அவ­ச­ரகால ­நி­லையை நீட்­டிப்­பது குறித்து ஆராய்ந்து வரு­கிறது.

தற்­போ­தைய அவ­ச­ர­நிலை இம்­மா­தம் 12ஆம் தேதி முடி­வ­டை­கிறது. ஆனால் தொற்­றுச் சம்­ப­வங்­கள் தொடர்ந்து பதி­வாகி வரு­வ­தால் மேலும் இரு வாரங்­க­ளுக்கு அதா­வது இம்­மா­தம் கடைசி வரை அவ­ச­ர­நி­லையை நீட்­டிக்க அது திட்­ட­மி­டு­கிறது.

புதிய உரு­மா­றிய 'டெல்டா' கிரு­மி­யின் கட்­டுக்­க­டங்­காத ஆட்­டத்­தால் மருத்­து­வக் கட்­ட­மைப்­புக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு அவ­ச­ர­நி­லையை நீட்­டிப்­ப­தைத் தவிர வேறு வழி­யில்லை என்று அரசு கூறு­கிறது.

தோக்­கியோ, ஒசாகா மற்­றும் 17 இதர பகு­தி­க­ளி­லும் அவ­ச­ர­கால நிலையை செப்­டம்­பர் 30 வரை நீட்­டிக்க விரும்­பு­வ­தாக பொரு­ளி­யல் அமைச்­சர் யசு­டோஷி நிஷி­முரா நேற்று தெரி­வித்­தார்.

இதன் தொடர்­பில் பிர­த­மர் யோஷி­ஹிடே சுகா அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை வெளி­யி­டு­வார் என்றும் அவர் கூறி­னார்.

"புதிய தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து குைறந்து வந்­தால் இம்­மாத இறு­திக்­குள் மருத்­து­வக் கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி தணி­யும்," என்­றார் அவர்.

அவ­ச­ர­நிலை அம­லில் இருந்­தா­லும் தடுப்­பூசி சான்­றி­தழ் உதவியுடன் பொரு­ளி­யலை படிப்­ப­டி­யாக வழக்க நிலைக்­குக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான முயற்­சி­கள் எடுக்­கப்­படும் என்று என்­எச்கே வெளி­யிட்ட மற்­றோர் அறிக்­கை­யில் அரசு தெரி­வித் ­தது.

சான்­றி­தழ் பெற்ற உண­வ­கங்­கள், மது­பா­னக்­கூ­டங்­க­ளுக்கு கட்டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­ட­லாம். அதே சம­யத்­தில் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­கள் உள்­நாட்­டுப் பய­ணங்­களை மேற்கொள்ள தடையிருக்காது என்று அறிக்கை தெரிவித்தது.