ஆப்கானிஸ்தானில் இரண்டு செய்தியாளர்களுக்கு அடி, உதை

ஆப்கானிஸ்தானில் இரண்டு செய்தியாளர்களுக்கு அடி, உதை

1 mins read
cc02504b-5f96-48e7-b024-b3aea3198ecb
செப்டம்பர் 8ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் காபூல் அலுவலகத்தில் தங்களுக்கு ஏற்பட்ட காயத்தை செய்தியாளர்கள் டாக்கி டர்யாடி(வலம்), நீமட் நாக்டி காட்டுகின்றனர். படம்: ஏஎஃப்பி -

காபூல்: ஆப்­கா­னிஸ்­தா­னில் ஆட்சி யைக் கைப்­பற்­றி­யுள்ள தலி­பான் படை­யி­னர் திருந்திவிட்டவர்களைப் போல தோற்­ற­ம­ளித்­தா­லும் அவர் களு­டைய உண்­மை­யான உரு­வம் நாளுக்கு நாள் தெளி­வாகி வரு கிறது.

அண்­மை­யில் காபூல் பெண்­கள் அடிப்படை உரிமை கேட்டு ஆர்ப்­ பாட்­டத்­தில் ஈடுபட்­ட­னர். இது குறித்து செய்தி சேக­ரித்து வெளி யிட்ட இரண்டு செய்­தி­யா­ளர் களுக்கு அடி, உதை விழுந்­த­தாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரி­வித்­துள்­ளது.

டாக்கி டர்­யாடி, நீமட் நாக்டி ஆகிய இரு­வ­ரும் காபூ­லைத் தள மாகக் கொண்டு செயல்­படும் எட்டி­ லாட்-இ-ரோஸ் எனும் ஊடகத்­தின் செய்­தி­யா­ளர்­கள். இரு­வ­ரும் செவ்­வாய்க்­கி­ழமை அன்று கைது செய்­யப்­பட்­ட­தாக 'ஸ்கை நியூஸ்' தக­வல் தெரி­வித்­தது.

தலி­பான் அதி­கா­ரி­கள் இரு வரை­யும் போலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்­துச் சென்று இரு வெவ்­வேறு சிறை­களில் அடைத்­த­னர். பின்­னர் இரு­வ­ரும் மோச­மாக தாக்­கப்­பட்டதாக எட்­டி­லாட்-இ-ரோஸை மேற்கோள்­காட்டி ஸ்கை நியூஸ் கூறி­யது. மறு­நாள் புதன் ­கி­ழமை விடுவிக்­கப்­பட்ட அவர்­கள் மருத்­துவமனை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இரு­வ­ரின் முகத்­தி­லும் முது­கி­லும் ரத்­தக் காயங்­கள் காணப்­பட்­டன. எட்­டி­லாட்-இ-ரோஸ் தலைமை ஆசி­ரி­ய­ரான ஸாக்கி டாரி­யாடி, தலி­பான்­ படையினரால் தடுத்து வைக்­கப்­பட்ட இரு சகாக்­களும் நான்கு மணி நேரம் தாக்­கப்­பட்­டதாக தெரி வித்தார். கொடூ­ர­மா­கத் தாக்­கப்­பட்­ட­தால் அவர்கள் நான்கு முறை சுய­நி­னைவை இழந்­த­தாகவும் அவர் சொன்னார்.