கொவிட்-19: ஆஸ்திரேலியாவில் அன்றாட பாதிப்பு அதிகரிப்பு

கொவிட்-19: ஆஸ்திரேலியாவில் அன்றாட பாதிப்பு அதிகரிப்பு

2 mins read
c3bc4595-4aae-4531-aa41-b67727036c3c
மெல்பர்னிலிருந்து கொவிட்-19 பாதிப்பு இல்லாத இடத்துக்கு மக்கள் செல்வதைத் தடுக்க வாகன ஓட்டுநர்களைச் சோதனையிடும் ஆஸ்திரேலிய அதிகாரிகள்.படம்: ஏஎஃப்பி -

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் அன்­றா­ட பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது.

நேற்­றைய நில­வ­ரப்­படி முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு மேலும் 1,900 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

சிட்­னி­யி­லும் மெல்­பர்­னி­லும் முடக்­க­நிலை நடப்­பில் உள்­ள­போது டெல்டா கொவிட்-19 கிருமி வகை­யால் ஏற்­படும் பாதிப்பு அதி­க­ரித்­துள்­ளது.

இத­னால் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மூன்­றா­வது அலை கொவிட்-19 பாதிப்பு ஏற்­படும் அபா­யம் அதி­கம் இருப்­ப­தாக அந்­நாட்டு அதி­கா­ரி­கள் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், ஆஸ்­தி­ரே­லிய சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் இத்­தனை நாட்­கள் கடைப்­பி­டித்த உத்­தி­களை ஓரங்­கட்டி வேறு திசை நோக்­கிச் செல்­கின்­ற­னர்.

கொவிட்-19 கிரு­மியை முழு­வ­து­மாக துடைத்­தொ­ழிக்க எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­யி­லி­ருந்து மாறி முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் எண் ணிக்கை அதி­க­ரித்­த­தும் நடப்­பில் உள்ள மிகக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

"இது­வரை முன்­னு­ரைக்­கப்­பட்­டதே நடந்து வரு­கிறது," என்று நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தின் முதல்­வர் கிளா­டிஸ் பெரி­ஜக்­கி­லி­யான் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

சிட்­னி­யில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அடுத்த வாரம் உச்­சத்தை எட்­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிட்­னி­யில் 1,156 பேர் கொவிட்-19 கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­களில் 207 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் உள்­ள­னர். 89 பேருக்கு செயற்கை சுவா­சக் கருவி பொருத்­தப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரும்­போ­தி­லும் நியூ சவுத் வேல்ஸ் மக்­கள்தொகை­யில் 70 விழுக்­காடு பெரி­யவர்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தும் வர்த்­த­கம் மீண்­டும் இயங்க அனு­மதி வழங்­கப்­ப­டக்­

கூ­டும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அடுத்த மாத நடுப்­ப­கு­திக்­குள் இந்த இலக்கை ஆஸ்திரேலியா அடை­யக்­கூ­டும் என்று அவர்­கள் தெரி­வித்­த­னர்.