ஆண்டுகள் பறந்தோடியும் காயங்கள் ஆறவில்லை

ஆண்டுகள் பறந்தோடியும் காயங்கள் ஆறவில்லை

2 mins read
3364c36c-b517-4c32-9ef0-4532141d48af
இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள தேவாலயத்தில் மெழுகுவர்த்தி, மாண்டோர் பெயர்களைக் கொண்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு நேற்று முன்தினம் பலர் அஞ்சலி செலுத்தினர். படம்: ஏஎஃப்பி -

நியூ­யார்க்: செப்­டம்­பர் 11 தாக்கு

தலின் 20ஆம் ஆண்டு நினை­வஞ்­ச­லியை அமெ­ரிக்கா நேற்று அனு

சரித்­தது.

2001ஆம் ஆண்­டில் அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் உள்ள பிர­சித்­தி­பெற்ற இரட்டை கோபு­ரங்­

க­ளைப் பயங்­க­ர­வா­தி­கள் தகர்த்­த­னர். தாக்­கு­தல் கார­ண­மாக ஏறத்­தாழ 3,000 பேர் மாண்­ட­னர்.

தாக்­கு­த­லில் மாண்­டோ­ருக்கு மரி­யாதை செலுத்­தும் வகை­யில் ஒவ்­வோர் ஆண்­டும் நினை­வஞ்­சலி செலுத்­தப்­ப­டு­கிறது.

இவ்­வாண்­டின் நினை­வஞ்­சலி கூடு­தல் உணர்­வு­பூர்­வ­மாக இருந்­தது. அண்­மை­யில், ஆப்­கா­னிஸ்­தானை தலி­பான் அமைப்­பி­னர் மீண்­டும் கைப்­பற்­றி­யதே இதற்­குக் கார­ணம். இரட்டை கோபு­ரம் தகர்த்­தப்­பட்ட போது ஆப்­கா­னிஸ்தான் தலி­பான் வசம் இருந்­தது. தாக்­கு­த­லுக்­குப் பிறகு, அதற்­குக் கார­ண­மாக இருந்த ஆல்-காய்தா பயங்­க­ர­வாத அமைப்­புக்­கும் ஒசாமா பின் லேட­னுக்­கும் தலி­பான் அடைக்­க­லம் கொடுத்­தி­ருப்­ப­தா­கக் கூறி அமெ­ரிக்கா படை­யெ­டுத்­தது.

அதன் விளை­வாக தலி­பா­னின் ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, ஆப்­கா­னிஸ்­தானி

லிருந்து அமெ­ரிக்­கப் படை­கள் அண்­மை­யில் வெளி­யே­றி­ய­தும் மின்­னல் வேகத்­தில் தலி­பான் மீண்­டும் ஆட்­சி­யைப் பிடித்­துள்­ளது.

செப்­டம்­பர் 11 தாக்­கு­த­லில்

உயி­ரி­ழந்­தோ­ரின் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இது ஏமாற்­றம் அடை­யச் செய்­துள்­ளது. இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கர்­கள் அனை­வ­ரும் ஒன்­றி­ணைய வேண்­டும் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கேட்­டுக்­கொண்­டார். அதுவே அமெ­ரிக்­கர்­க­ளின் பலம் என்­றார் அவர். தாக்­கு­தல் நடத்­தப்­பட்ட ஒவ்­வோர் இடத்­துக்­கும் நேரில் சென்று மாண்­டோ­ருக்கு அதி­பர் பைடன் மரி­யாதை செலுத்த இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

நேற்று நடை­பெற்ற நினை­வஞ்­சலி நிகழ்­வில் மாண்­டோ­ரின் பெயர்­களை அவர்

களது உற­வி­னர்­கள் வாசித்­த­னர்.

இரட்டை கோபு­ரங்­கள் மீது விமா­னங்­கள் மோதி­யது, கோபு­ரங்­கள் இடிந்து விழுந்­தது, தற்­காப்பு அமைச்­சின் கட்­ட­டம் தாக்­கப்­பட்­டது, 'ஃபிளைட் 93' விழுந்து நொறுங்­கி­யது ஆகி­ய­வற்றை அனு­ச­ரிக்­கும் வகை­யில் ஆறு முறை மௌன அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. "இரு­பது ஆண்­டு­கள் கடந்து ­விட்டபோதி­லும் 2001 செப்­டம்­பர் 11ஆம் தேதி நடந்த பயங்­க­ர­வா­தத் தாக்­கு­த­லின் அதிர்ச்சி அலை­கள் தொடர்ந்து இன்­ன­மும் பல இடங்­க­ளி­லும் எதி­ரொ­லிக்­கின்­றன. சிங்­கப்­பூ­ரர்­கள் விழிப்­பு­நி­லை­யைத் தள­ர­விட்டு விடக்­கூ­டாது, சமூ­கப் பிணைப்­பைக் கிள்­ளுக்­கீ­ரை­யா­கக் கரு­தக்­கூ­டாது," என்று, தாக்­கு­த­லின் 20ஆம் ஆண்டு நினை­வைக் குறிக்­கும் வகை­யில் வெளி­யிட்ட செய்­தி­யில் பிர­த­மர் லீ சியன் லூங் வலி­யு­றுத்­தி­உள்­ளார்.