குவீன்ஸ்லாந்தில் முடக்கநிலை விதிக்கப்படக்கூடும்

2 mins read
6f9e2117-b557-4068-bc6e-05f5bd00be80
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கடற்கரைக்குச் சென்றோரைச் சோதனையிட்ட ஆஸ்திரேலிய போலிஸ் அதிகாரிகள்.படம்: இபிஏ -

கேன்­பரா: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் குவீன்ஸ்­லாந்­தில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால் அங்கு முடக்­க­நிலை அறி­விக்­கப்­ப­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த 24 மணி நேரத்­தில் மேலும் ஐந்து பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக குவீன்ஸ்­லாந்து அதி­கா­ரி­கள் கூறி­னர்.

அடுத்த சில நாட்­களில் கிரு­மிப் பர­வல் நிலை­யைப் பொறுத்து முடக்­க­நிலை குறித்து முடி­வெ­டுக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

"தற்­போது ஒரு குடும்­பம் மட்­டுமே பாதிக்­கப்­பட்­டுள்­ளது. பிற­ருக்­கும் கிருமி பர­வி­யது தெரி­ய­வந்­தால் உட­னடி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­வ­ரும்," என்று குவீன்ஸ்­லாந்து மாநி­லத்­தின் முதல்­வர் அன்­னஸ்­டே­ஷியா பல­சே­சுக் கூறி­னார். நோய்­வாய்ப்­பட்ட குடும்­பம் பிரிஸ்­பன் நக­ரில் வசிப்­ப­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் முடக்­க­நிலை நடப்­பில் உள்­ளது. தலை­ந­கர் கேன்­ப­ரா­வி­லும் மெல்­பர்­னி­லும் முடக்­க­நிலை நடப்­பில் உள்­ளது.

இந்­நி­லை­யில், குவீன்ஸ்­லாந்­தி­லும் முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டால் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பொரு­ளி­யல் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­படும்.

பொரு­ளி­யல் மந்­த­நிலை ஏற்­படும் ஆபத்­தும் இருப்­ப­தாக அஞ்­சப்­ப­டு­கிறது.

நேற்­றைய நில­வ­ரப்­படி ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மேலும் 2,077 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு கடந்­த மூன்று மாதங்­க­ளாக வீட்­டி­லேயே இருக்­கும் உத்­த­ரவு நடப்­பில் உள்­ளது. இருப்­பி­னும், நேற்று மேலும் 1,599 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

சமூக இடை­வெளி விதி­மு­றை­யைக் கட்­டா­யம் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று அம்­மா­நில மக்­க­ளுக்கு அதி­கா­ரி­கள் நினை­வூட்­டி­யுள்­ள­னர்.

இருப்­பி­னும், கடு­மை­யான வெயில் கார­ண­மாக நூற்­றுக்­க­ணக்­கான மக்­கள் நேற்று கடற்­க­ரைக்­குச் சென்­ற­னர்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் அவ­ச­ர­நிலை விதி­மு­றை­க­ளின்­படி வீட்­டி­லேயே இருக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டும்­போது தங்­கள் வீட்­டி­லி­ருந்து அதி­க­பட்­சம் ஐந்து கிலோ மீட்­டர் தூரத்­தில் இருக்­கும் இடங்­க­ளுக்கு மட்­டும் மக்­கள் செல்­ல­லாம்.

கடற்­க­ரை­யில் இருப்­போர் இந்த விதி­மு­றை­யைப் பின்­பற்­று­கி­றார்­களா என்­ப­தைக் கண்­ட­றிய போலி­சார் சோத­னை­யி­டு­வர் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்­வர் பிராட் ஹசார்ட் கூறி­னார்.