வெலிங்டன்: நியூசிலாந்தில் நேற்றைய நிலவரப்படி
மேலும் 23 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலை மீண்டும் முறியடித்துவிட முடியும் என்று முனைப்புடன் இருந்த நியூசிலாந்துக்கு இது ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டோர் அனைவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள்.
டெல்டா கொவிட்-19 கிருமி வகை பரவல் காரணமாக கடந்த மாதம் திடீர் முடக்கநிலை அறிவிக்கப்பட்டது.
கிருமிப் பரவலைத் தடுக்க தேசிய தடுப்பூசித் திட்டத்தை நியூசிலாந்து விரைவுபடுத்தியுள்ளது.

