மணிலா: பிலிப்பீன்சில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று மேலும் 26,303 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளைத் தற்காலிகமாக மூட மேலும் இரண்டு மருத்துவமனைகள் முடிவெடுத்துள்ளன.
இவ்விரு மருத்துவமனைகளும் தலைநகர் மணிலாவுக்கு தென்கிழக்கில் உள்ள கியூசோன் மாநிலத்தில் உள்ளன.
கொவிட்-19 நோயாளி
களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் இனி இடம் இல்லை என்று அந்த இரண்டு அரசாங்க மருத்துவமனைகளும் தெரிவித்தன.
நேற்றைய நிலவரப்படி பிலிப்பீன்சில் கொவிட்-19 காரணமாக மேலும் 79 பேர் மாண்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.