டாக்கா: பங்ளாதேஷில் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு பிள்ளைகள் நேற்று மீண்டும் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பினர். கிருமிப் பரவல் காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், குழந்தைகளிடையேயான ஏற்றத்தாழ்வுகளை இது மோசமடைய செய்யும் என்று யுனிசெஃப் எச்சரித்ததைத் தொடர்ந்து பங்ளாதேஷில் மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பங்ளாதேஷில் 41% மட்டுமே திறன்பேசிகள் வைத்துள்ளனர். திறன்பேசிகள் இருந்தாலும் கிராமப்புறங்களில் அதிவேக இணைய சேவை இல்லாததால், இணையம் வழி வகுப்பில் பலராலும் பங்கேற்க முடியவில்லை.
கிருமிப் பரவல் காரணமாக, மாணவர்கள் இணையவழி கல்வி கற்றலுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் அதற்கான சாத்தியம் இல்லாததால், பெரும்பாலான பிள்ளைகள் தங்கள் கற்றல் பயணத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக யுனிசெஃப் கூறியுள்ளது.
இந்தியாவில் ஆறு முதல் 13 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில், 42 விழுக்காட்டினருக்கு இணைய சேவை இல்லை.

