'பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படும்'

'பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படும்'

2 mins read
3947475e-3eb4-412c-8d22-4a940f852b74
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் அக்­டோ­பர் 3ஆம் தேதி முதல் பள்­ளி­கள் திறக்­கப்­படும் என்று அதன் கல்வி அமைச்­சர் ராட்ஸி ஜிடின் அறி­வித்­துள்­ளார்.

தேசிய மீட்­சித் திட்­டத்­தின் இரண்­டாம், மூன்­றாம் மற்­றும் நான்­காம் நிலை­யில் உள்ள அனைத்து மாநி­லங்­க­ளின் பள்­ளிக்கூடங்­களும் வரும் அக்­டோ­பர் மாதம் 3ஆம் தேதி முதல் ஒவ்­வொரு வகுப்­பும் 50 விழுக்­காட்டு மாண­வர்­க­ளு­டன் இயங்­கும் என்று அவர் சொன்­னார்.

அதே சம­யம் தேசிய மீட்­சித் திட்­டத்­தின் முதல் நிலை­யில் உள்ள மாநி­லங்­களில் பள்­ளிக்­கூ­டங்­கள் தொடர்ந்து மூடப்­பட்­டி­ருக்­கும் என்­றும் அவர் சொன்­னார்.

வாராந்­திர சுழற்சி முறையில் ஒவ்­வொரு வகுப்­பி­லும் 50% மாண­வர்­கள் பள்­ளிக்­கூ­டத்­திற்­குச் செல்­வார்­கள்.

ஆனால் பொதுத்­தேர்வு எழு­த­வுள்­ள­வர்­கள், தங்­கு­வி­டு­தி­யில் இருந்து படிப்­ப­வர்­கள், சிறப்பு தேவை­யுள்­ள­வர்­கள் உள்­ளிட்ட குறிப்­பிட்ட சில மாண­வர்­கள் சுழற்சி அடிப்­ப­டை­யில் அல்­லா­மல் அனைத்து நாட்­களும் பள்­ளிக்

­கூ­டத்­திற்­குச் செல்­வார்­கள்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள், போட்­டுக்கொள்­ளா­த­வர்­கள் என அனை­வ­ரும் பள்­ளிக்­குச் செல்­ல­லாம்.

ஒரு­வேளை பெற்­றோர்­ தங்­க­ளது பிள்­ளை­களை வீட்டிலேயே வைத்திருக்க விரும்பினால், அவர் கள் வீட்­டில் இருந்து கற்கலாம் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, மாண­வர்­கள் சீருடை அணிந்து வர­வேண்­டும் என்­பது கட்­டா­ய­மல்ல, ஆனால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்­றும் கல்வி அமைச்சர் சொன்­னார்.

சுமார் 2,500 ஆசி­ரி­யர்­கள் இன்­ன­மும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருப்­ப­தா­க­வும் அவர்­க­ளுக்கு கற்­பித்­த­லைத் தவிர வேறு பொறுப்­பு­க­ளைத் தரு­வது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அமைச்­சர் சொன்­னார்.

அதோடு 2022ஆம் ஆண்­டிற்­கான கல்வி ஆண்டு மார்ச் மாதம் தொடங்­கும் என்­றும் அது­வரை மாண­வர்­கள் தற்­போ­தைய வகுப்­பி­லேயே தொடர்­வார்­கள் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

டிசம்­பர் 10 முதல் டிசம்­பர் 31ஆம் தேதி வரை 2021ஆம் ஆண்­டி­றுதி பள்ளி விடு­முறை விடப்­படும்.

"மாண­வர்­கள் மீண்­டும் பள்­ளிக்­குத் திரும்­பு­வதை ஊக்­கு­விப்­பதே தற்­போ­தைய நோக்­கம்.

"கிரு­மிப் பர­வல் அபா­யங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தன் மூலம் அவர்­கள் படிக்­கக்­கூ­டிய பாது­காப்­பான சூழலை உரு­வாக்­கு­வதே எங்­கள் நோக்­கம்," என்­றார் ஜிடின்.

மலேசிய அமைச்சர்: முகக்கவசம் கட்டாயம்; சீருடை கட்டாயமல்ல