பங்ளாதேஷ்: 18 மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்குச் சென்ற மாணவர்கள்

பங்ளாதேஷ்: 18 மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்குச் சென்ற மாணவர்கள்

1 mins read
d4a9d2f9-2581-4c7e-8310-74beb1584594
டாக்காவில் நேற்று பிள்ளைகள் மீண்டும் பள்ளிக் கூடத்திற்குத் திரும்பியபோது, மலர்கள், இனிப்பு கொடுத்து அவர்கள் வரவேற்கப்பட்டனர். அதோடு முகக்கவசம் அணியுமாறும் கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்துமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

டாக்கா: பங்­ளா­தே­ஷில் கிட்­டத்­தட்ட 18 மாதங்­க­ளுக்­குப் பிறகு பிள்­ளை­கள் நேற்று மீண்டும் பள்ளிக்­கூ­டத்­திற்­குத் திரும்­பி­னர்.

கிரு­மிப் பர­வல் கார­ண­மாக நீண்ட நாட்­க­ளாக பள்­ளிக்­கூ­டங்­கள் மூடப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லை­யில், குழந்­தை­க­ளி­டை­யே­யான ஏற்­றத்­தாழ்­வு­களை இது மோச­

ம­டைய செய்­யும் என்று யுனி­செஃப் எச்­ச­ரித்­த­தைத் தொடர்ந்து பங்ளா

தேஷில் மீண்­டும் பள்­ளிக்­கூ­டங்­கள் திறக்­கப்­பட்­டுள்­ளன.

பங்­ளா­தே­ஷில் 41% மட்­டுமே திறன்­பே­சி­கள் வைத்­துள்­ள­னர். திறன்­பே­சி­கள் இருந்­தா­லும் கிரா­மப்புறங்­களில் அதி­வேக இணைய சேவை இல்­லா­த­தால், இணை­யம் வழி வகுப்­பில் பல­ரா­லும் பங்­கேற்க முடி­யவில்லை.

கிரு­மிப் பர­வல் கார­ண­மாக, மாண­வர்­கள் இணையவழி கல்வி கற்­ற­லுக்­குக் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­னர். ஆனால் அதற்­கான சாத்­தி­யம் இல்­லா­த­தால், பெரும்­பா­லான பிள்­ளை­கள் தங்­கள் கற்­றல் பய­ணத்­தில் பெரும் பின்­ன­டை­வைச் சந்­தித்­துள்­ள­தாக யுனி­செஃப் கூறி­யுள்­ளது.

இந்தியாவில் ஆறு முதல் 13 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில், 42 விழுக்காட்டினருக்கு இணைய சேவை இல்லை.