தைப்பே: பலத்த காற்று, கனமழை என சாந்து சூறாவளி பிலிப்பீன்சையும் தைவானையும் புரட்டிப் போட்டுள்ளது.
சூறாவளி காரணமாக தைவானில் ரயில், விமான, படகுப் போக்குவரத்து சேவைரத்து செய்யப்
பட்டன. சுமார் 26,000 வீடுகளுக்கு மின்சார சேவை தடைபட்டுள்ளது.
சென்ற வாரம் மிகவேகமாக உருவான சாந்து புயல் முதலில் கடும் அபாயமிக்கதாக வகைப்
படுத்தப்பட்டிருந்தது. பின்னர் அது வேகம் குறைந்த சூறாவளியாக அறிவிக்கப்பட்டது.
இருந்தாலும் தைவானின் கிழக்குப் பகுதிகளில் இதுவரை 200 மி.மீ. மழை பதிவானதாகவும் 7 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பியதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சாந்து புயல் காரணமாக பிலிப்பீன்சின் வடக்கு தீவுகளில் உள்ள ஆயிரக்கணக்கானோர் தங்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

