மணிலா: அமெரிக்காவுட னான ராணுவ ஒப்பந்தத்தை தொடர, பிலிப்பீன்ஸ் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவும் பிலிப்பீன்சும் இருதரப்பு தற்காப்பு திட்டப் பணிகளை மீண்டும் தொடங்க வுள்ளன.
இரு தரப்பினரின் நீண்ட கால கூட்டணியை வலுப் படுத்தும் வகையில் இது அமைந்துள்ளதாக கருதப்படு கிறது.
அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது அதைத் தொடர பிலிப்பீன்ஸ் ஒப்புக்கொண்டு உள்ளது.
இதுதொடர்பாக, பிலிப்பீன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் டெல்ஃபின் லோரென்சானா, வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினைச் சந்தித்து, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு உறுதி கூறினார்.

