தலிபான் கைப்பற்றியதை அடுத்து காபூலில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டுப் பயணிகள் விமானம்

தலிபான் கைப்பற்றியதை அடுத்து காபூலில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டுப் பயணிகள் விமானம்

1 mins read
30120505-6ed6-45ad-8367-2e087a1179d8
படம்: ஏஎஃப்பி -

தலிபான் படையினர் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, தலைநகர் காபூலில் முதல் வெளிநாட்டுப் பயணிகள் விமானம் திங்கட்கிழமை (செப்டம்பர் 13) தரையிறங்கியது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்திலிருந்து வந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் விரலைவிட்டு எண்ணும் அளவிலேயே பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

"விமானத்தில் ஏறக்குறைய 10 பயணிகள் மட்டுமே இருந்தனர். சொல்லப்போனால், பயணிகளைவிட விமானப் பணியாளர்களே அதிகம் இருந்தனர்," என்று அந்த விமானத்தில் பயணம் செய்த ஏஎஃப்பி நிறுவனச் செய்தியாளர் ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்