'ஆசியாவுக்கு வெளியே விமானப் பயணம் வேகமாக மீளும்'

'ஆசியாவுக்கு வெளியே விமானப் பயணம் வேகமாக மீளும்'

1 mins read
625d0b32-7e97-4b3b-aa02-459f9b3cf64a
படம்: ராய்ட்டர்ஸ் -

ஆசிய வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு இடையே அனைத்துலக விமானப் பயணங்களுடன் ஒப்புநோக்க, ஆசியாவுக்கு வெளியே பயணங்கள் விரைவில் மீட்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆசிய பசிபிக் ஏர்லைன்ஸ் சங்கம் கூறியுள்ளது.

டெல்டா கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த பல ஆசிய நாடுகள் அண்மை மாதங்களாக கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளன.

"கண்டங்களுக்கு இடையே விமானப் பயணங்கள் இடம்பெறலாம். காரணம், ஆசிய பசிபிக் வட்டாரத்திலிருந்து வருபவர்களுக்கு பல மேற்கத்திய நாடுகள் தங்களது எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளன," என்று சங்கத்தின் தலைமை இயக்குநர் சுபாஷ் மேனன் கூறியுள்ளார்.

பொதுவாக, தடுப்பூசி விகிதம் அதிகமுடைய இடங்களில் விமானப் பயணம் விரைவில் மீட்சியடையும் என்றார் அவர்.