காபூலில் மீண்டும் அனைத்துலக விமானச் சேவை

காபூலில் மீண்டும் அனைத்துலக விமானச் சேவை

1 mins read
779f6498-b324-4485-a26a-0be991507b29
-

காபூல்: ஆப்­கா­னிஸ்­தா­னைக் கடந்த மாதம் தலி­பான்­கள் கைப்­பற்றி பின்­னர் முதன்­ முறை­யாக அங்கு அனைத்­துலக வர்த்­தக விமா­னச் சேவை­கள் செயல்­படத் தொடங்கியுள்ளன.

இஸ்­லா­மா­பாத்­தி­லி­ருந்து சென்ற பாகிஸ்­தா­னிய அனைத்­து­லக விமா­னச் சேவை விமா­னம், நேற்று காலை­ காபூ­லில் தரை இறங்கியது. பின்­னர் அந்த விமா­னம் 70 பய­ணி­களை ஏற்­றிக்­கொண்டு மீண்­டும் இஸ்­லா­மா­பாத் திரும்­பி­யது.

விமா­னத்­தில் இருந்த பெரும்­பா­லான பய­ணி­கள், உலக வங்கி போன்ற அனைத்­து­லக அமைப்­பு­களில் பணி­பு­ரி­யும் ஆப்­கா­னி­யர் களின் குடும்­பத்­தார் என்று விமான நிலைய ஊழி­யர்­கள் கூறி­னர். அமெ­ரிக்­கப் படை­கள் ஆப்­கா­னை­விட்டு வெளி­யே­றி­ய­போது அடித்து நொறுக்­கப்­பட்ட காபூல் விமான நிலை­யத்தை கத்­தா­ரின் உத­வி­யு­டன் தலி­பான்­கள் மீண்­டும் இயக்­கத் தொடங்­கி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் ஆப்­கா­னிஸ்­தான் எதி­நோக்­கும் மிகப் பெரிய மனி­தா­பி­மான நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க 600 மில்­லி­யன் டாலர் நிதி தேவை என்று ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.