ஷாங்காய்: பிப்லிபீன்ஸ், தைவான் ஆகியவற்றைத் தாக்கிய சாந்து சூறாவளி சீனாவில் நேற்று கரைகடந்ததைத் தொடர்ந்து ஷாங்காயிலும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரை வட்டாரங்களிலும் விமானச் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. பள்ளிகளும் ரயில் நிலையங்களும் மூடப்பட்டன.
சாந்து சூறாவளி வலு குறைந்துள்ளபோதும், அது கடும் மழையையும் கடும் புயல்காற்றையும் ஏற்படுத்தியது. சீஜியாங் மாநிலத்தின் ஒன்பது வட்டாரங்களில் வெள்ள அபாயம் அறிவிக்கப்பட்டது. சாந்து நேற்று தென்கொரியாவையும் தாக்கியது.